vendredi 31 août 2012

கண்ணனும் சிவனும்



வந்தோமே இங்குநாம் வாழ்ந்தோமே இல்லாமல்
தந்தோமே இத்தரணி சால்புறவே! - செந்தமிழ்
காத்த கவி.கண்ண தாசன் கவிதைகளைக்
காத்த பிரகாசர் காண்!

(மருத்துவா் த,சிவப்பிரகாசம் மணிவிழா மலா்)

அந்தாதி அரசா்




பாசுரம் போன்றேநற் பாக்கள் படைத்திட்ட
பா.சு. அரியபண் புத்திரனார்! - மாசிலா
ஆசு கவிவாணர்! அந்தாதிப் பாவரசர்!
தேசு புகழாளர் சீர்

(அந்தாதி அரசர் நூற்றாண்டு மலர்)

கம்பா அருளுக!




ஒருநாளும் தேடாமல் ஓடினேன் கம்பா!
திருநாளம் கிட்டாமல் தேடினேன்! தெம்பாய்
வரும்நாளும் வாய்த்திட வேண்டுகிறேன்! உன்னருளால்
பெருநாளின் பேறுகளைப் பெற்று!

பாட்டெழுத என்னுள் பரவசம்கண் டேன்!எனை
ஆட்கொண்டு மிக்க சுவைக்கவி வேண்டேன்!உன்
தாட்கண்டு நின்றேன்! சிறுசுவையும் தந்திடுக!
மாட்டென்று ஒதுக்க மனத்து

jeudi 30 août 2012

என்னுயிர்த் தமிழே





பாட்டுக் கலையைப் பழகாமல் விட்டுவிட
ஏட்டில் படித்த இலக்கணம் என்னாகும்?
காட்டில் திரிந்து கிடந்தாலும் நற்கவிதை
தீட்டி மகிழ்வேன் தெளிந்து